Monday, November 3, 2014

முழுமதி அறக்கட்டளையின் உழ்வு: விவசாய உதவித்திட்டம்.

பெரும்பான்மையான முழுமதி உறுப்பினர்களின் பாரம்பரியத்தொழில் விவசாயம். விவசாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், இயற்கை விஞ்ஞானி முனைவர். நம்மாழ்வாரின் “வானகம்” அமைப்பின் மேற்க்கோள்காட்டி , கிராமப்புற மாணவர்களுக்கு விவசாயம் தொடர்பான படிப்பின் மீது ஆர்வத்தை வளர்ப்பதிலும், விவசாயத்தின் மீதான ஈடுபாட்டை ஊக்குவிப்பதிலும் முழுமதி தம்மை அர்பணிக்க கடமைப்பட்டுள்ளது.
விவசாயத்துறை தொடர்பான ஆராய்ச்சியை ஊக்குவிப்பது. சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத இயற்கை விவசாயம் மற்றும் வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
மரம் வளர்ப்பின் அவசியத்தை பள்ளிக்கல்வியின் தொடக்கம் முதலே உணர்த்துதல், மரம் வளர்ப்பதற்கான உதவி மற்றும் சூழலை உருவாக்கி கொடுத்தல்.

No comments:

Post a Comment