Tuesday, November 11, 2014

முழுமதி அறக்கட்டளை - புதுகரிக்காத்தூர் பள்ளி நூலகம் திறப்பு விழா

முழுமதி அறக்கட்டளை வழங்கும் கல்வி மேம்பாட்டுத்திட்டம்-1
புதுகரிக்காத்தூர் அரசுப்பள்ளி நூலகம் திறப்புவிழா அழைப்பிதழ்
முழுமதி அறக்கட்டளையானது போளூர் வட்டத்தில் அமைந்துள்ள புதுக்கரிக்காத்தூர் அரசுப்பள்ளியை முன்மாதிரி பள்ளியாக மாற்றுவதற்காக தேர்ந்தெடுத்துள்ளதை நாம் அறிந்ததே. இப்பள்ளியில் நூலகம் அமைப்பது பற்றி ஏற்கெனவே ஆலோசனைகள் கேட்டு பதிவிட்டிருந்தோம். ஏறத்தாழ 300 புத்தகங்களை கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்துடன் துளிர் (அறிவியல் இதழ்), பூவுலகு மின்மினி (சுற்றுச்சூழல் இதழ்) போன்ற மாத இதழ்களையும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
நூலகத்திற்கு தேவையான புத்தகப்பட்டியல் தயாரிக்க நண்பர்கள் பல வகைகளில் உதவி புரிந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் இப்பதிவின் மூலம் முழுமதியின் சார்பாக எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நூலகமானது, குழந்தைகள் நாளான நவம்பர் 14 ஆம் திகதி திறப்பு விழா காணவிருக்கிறது. இத்திறப்பு விழாவில் நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்து முழுமதியின் செயல்பாட்டிற்கு தங்கள் மேலான ஆதரவை நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திறப்பு விழா நாள்: 14 - 11 – 2014
இடம்: புதுகரிக்காத்தூர் அரசுப்பள்ளி, (போளூரிலிருந்து வேலூர் செல்லும் சாலை, முருகப்பாடி வழி)
நேரம் : மதியம் 2 மணி
தொடர்புக்கு: திரு. பரசுராமன் : + 91-9487349488
(தலைமை ஆசிரியர்)
திரு. ஜெகநாதன் : + 91-9894016112
(ஆசிரியர்)
முழுமதி முகநூல் பக்கம்:https://www.facebook.com/groups/227137273964819/?ref=ts&fref=ts
முழுமதி தன்னார்வலராக இணைய:
https://docs.google.com/…/1YYco2QgvxpIadUvGvShh3C8…/viewform
நன்றி
தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்
முழுமதி அறக்கட்டளை
http://muzhumathi.org/Tamil/


முழுமதி அறக்கட்டளை - புதுக்கரிக்காத்தூர் துவக்கப்பள்ளி சீரமைப்பு துவக்கவிழா

முழுமதி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட பள்ளி சீரமைப்பு துவக்கவிழா சிறப்பாக நடைபெற்றது... இது நல்லதொரு ஆரம்பம், மாணவர்கள், கிராம மக்கள், பங்கு கொண்ட ஆசிரிய பெருமக்கள், முழுமதி அறக்கட்டளையினர் என மாற்றத்தை எதிர்பாத்க்கும் அனைவருக்கும் பெரும் உற்ச்சாகத்தை அளித்துள்ளது. ஒத்துழைப்பு நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் முழுமதி அறக்கட்டளை சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
==================
காமராசர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு
முழுமதி அறக்கட்டளை (Muzhumathi Trust) சார்பாக பள்ளி புதுப்பிப்பு பணிகளுக்கான துவக்க விழா திருவண்ணாமலை மாவட்டம் - போளூர் வட்டம் - சேத்துபட்டு ஒன்றியம் - புதுக்கரிக்காத்தூர் துவக்கப்பள்ளியில் இன்று சிறப்பாக நடைபெற்றது.
தலைமை
திரு.P. சங்கர், B.SC., B.ED,.
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள், சேத்பட்
திருமதி. ஷகீலா தேவி, B.SC., B.ED.,
கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள் , சேத்பட்.
சிறப்பு விருந்தினர்கள்
திரு. அன்புமணி, கல்வியாளர் அவர்கள் ,
கிராம கல்வி ஏவுதள மையம் மற்றும் முழுமதி நிர்வாகம், சிதம்பரம்
திரு . சுரேஷ்குமார் அவர்கள்
முழுமதி நிர்வாகம், சிதம்பரம்.
முன்னிலை
திரு. நாவரசன், ஊராட்சி மன்ற தலைவர்.
திரு. K. அன்பழகன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்
திருமதி. M. குணசுந்தரி, கிராம கல்விக்குழு தலைவி.
திரு. K. களியப்பன், வார்டு உறுப்பினர்.
வரவேற்புரை
திரு. R. பரசுராமன், B.Sc, B.Ed. தலைமை ஆசிரியர் அவர்கள்.
வாழ்த்துரை
திரு. R. பூபதி,B.sc,B.Ed,. பட்டதாரி ஆசிரியர், மாம்பட்டு.
திரு. R. ஜெகநான், B.Sc,B.Ed,. இடைநிலை ஆசிரியர்,கணேசபுரம்.
திரு. D. யுவராஜ், DTED, BA, தன்னார்வாளர், முழுமதி அறக்கட்டளை.
நன்றியுரை
திரு. சிவராமன்,B.Sc, DTEd., இடைநிலை உதவி ஆசிரியர்,
மாணவ மாணவிகள் & கிராம பொதுமக்கள். புதுக்கரிக்காத்தூர்.
விழாவில் முழுமதி சார்பாக பள்ளிக்கு சுமார் ரூ. 21600 செலவில் பள்ளிக்கு வண்ணமிடுதல் - பள்ளி மாணவர்களுக்கான அகராதிகள் - வாய்பாடுகள் - பென்சில் பேனா உள்ளிட்ட பொருட்களும் அளிக்கப்பட்டன.
முழுமதி நிர்வாகத்தினரை கல்வி துறை அதிகாரிகள் உட்பட அனைவரும் பாராட்டி அவர்களின் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.




நண்பர்களுக்கு வணக்கம்,
முழுமதி அறக்கட்டளை கல்வி மேம்பாட்டிற்காக புதுகரிக்காத்தூர் அரசுப்பள்ளியுடன் இணைந்து செயல்படவிருக்கும் பணிக்கான துவக்க விழாவானது 15-07-2014 அன்று இனிதே நிறைவுற்றது. விழாவில் பங்கெடுத்து சிறப்பித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் முழுமதியின் சார்பாக நன்றிகள். அடுத்தகட்டமாக அடிப்படை வசதிகளை (கழிவறை, குடிநீர் சுத்திகரிப்பு வசதி, விளையாட்டுத்திடல் செப்பனிடுதல், முதலான) பூர்த்தி செய்யும் பணி ஒருபுறம் தொடர்ந்து செயல்படும். அதோடு மாணவர்களின் வழக்கமான பாடத்திட்டம் பாதிக்கப்படாத வகையில் அவர்களின் கற்கும் திறன் மேம்பட, நுண்ணறிவுத்திறன்களை வளர்க்க கல்வி ஆலோசகர்களின் வழிகாட்டுதலோடும், ஜப்பான், பின்லாந்து போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் தொடக்கப்பள்ளி கல்விமுறையை முன்மாதிரியாகக் கொண்டும் முழுமதியின் சார்பாக சில பாடத்திட்டங்களை (study materials) தயாரிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதனை செயல்படுத்த முழுமதிக்கு சேவை மனப்பான்மையுடைய தமிழ், ஆங்கிலம், வரலாறு, கணிப்பொறி, கணிதம், அறிவியல் போன்ற துறைகளில் புலமைப்பெற்ற அறிஞர்கள், இளைஞர்கள் தன்னார்வலர்களாக (volunteers) தேவைப்படுகிறார்கள். அவர்களுடைய பணி பெரும்பாலும் விடுமுறை நாட்களில் நேரம் இருப்பவர்கள் முழுமதி கல்வி மேம்பட்டுக்குழுவினரால் வகுக்கப்படும் பிரத்யேக பாடத்திட்டகளை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதாகும். ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இங்கே இணைப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து muzhumathi.org@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப கேட்டுக்கொள்கிறோம்.
இணைப்பு: https://pdfzen.com/7ee21e8e7bf99fb8
முழுமதி கல்வி மேம்பாட்டுக்குழுவினரின் பணிகள் சவால்கள் நிறைந்தது, குழுவினர் கீழ்க்கண்டவற்றை கவனித்தில் கொண்டு செயல்படவிருக்கிறோம்
Ø மாணவர்களின் பாடச்சுமை கூடிவிடக்கூடாது
Ø மாணவர்களின் வழக்கமான பாடத்திட்டம் பாதிக்கப்படக்கூடாது
Ø அவர்கள் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையிலும் அதே சமயம் நுண்ணறிவுத்திறன்களை வளர்க்கும் வகையிலும் செயல்வழிப்பாடத்திட்டமாக இருத்தல் வேண்டும்.
முழுமதி மேற்கொள்ளவிருக்கும் இப்பணிக்கு கல்வியாளர்கள் தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கவும் அல்லது அவர்கள் முழுமதியுடன் இணைந்து செயல்படவும் வரவேற்கப்படுகிறார்கள்.
இப்படிக்கு
முழுமதி நிர்வாகம்
http://muzhumathi.org/Tamil/

https://docs.google.com/.../1YYco2QgvxpIadUvGvSh.../viewform

முழுமதி கல்வி மேம்பாட்டுத்திட்டங்கள்

முழுமதி கல்வி மேம்பாட்டுத்திட்டங்கள்
நண்பர்கள் உங்கள் பார்வையில் ஒரு தொடக்கப்பள்ளி எப்படி இயங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அத்தனை கருத்துக்களையும் எங்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம். அதுதொடர்பான புத்தகங்கள் ஏதேனும் இருப்பின் எங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்.
முழுமதி பார்வையில், புதுகரிக்காத்தூர் அரசுப்பள்ளியை முன்மாதிரி அரசுப்பள்ளியாக மாற்ற கீழ்க்கண்ட அடிப்படைக்கூறுகளை செயல்படுத்தவிருக்கிறது.
1. பகுத்தறியும் திறனை வளர்த்தெடுத்தல்:
மாணவர்கள் தங்கள் பாடத்திட்டங்களிலும், அவர்கள் தினசரி வாழ்வில் பார்க்கும், உள்வாங்கும் அனைத்து விடயங்களிலும் ஏன், எதற்கு, எப்படி போன்ற வினாக்களை தங்களுக்குள் எழுப்பி தெளிவுபெற வைப்பது. நூலங்கங்களை அமைத்துக்கொடுப்பதின் மூலம் வாசிப்புத்திறனை வளர்த்தெடுத்தல். கதை சொல்லி வினா எழுப்புதல்.
2. சுயசார்பை வளர்த்தெடுத்தல்:
ஒவ்வொரு மாணவரின் விருப்பங்களை, தனித்திறன்களை கண்டறிவது. மாணவர்கள் விரும்பும் துறையை தேர்ந்தெடுத்து படிக்க வழிகாட்டுவது, இதில் குறிப்பாக பெற்றோரின் திணிப்பு இல்லாத வழிகாட்டுதலோடு மாணவர்களை சுயமாக சிந்தித்து செயல்பட உதவி புரிவது. முழுமதி நண்பர்களுக்கு சுயமாக கடிதம் எழுதும் பழக்கத்தை வளர்த்தெடுத்தல், முழுமதி நண்பர்கள் அனுப்பும் கடிதங்களுக்கு பதில் எழுத பயிற்றுவித்தல். மாணவர்கள் தங்கள் மதிய உணவிற்கு தேவையான காய்கறிகளை தாங்களே பராமரித்து வளர்த்தெடுக்க காய்கறி தோட்டத்தை அமைத்துக்கொடுத்தல்.
3. சமூகம் சார்ந்த சிந்தனையை வளர்த்தெடுத்தல்:
சமூகத்தில் தனிமனித ஒழுக்கம் பற்றி விவரித்தல், பொது சொத்தை பராமரித்தல், சாலை விதிகளை பின்பற்றுதல், பொது இடங்களை தூய்மையாக வைத்தல், மரம் நட்டு பராமரித்தல், தீண்டாமையை ஒழித்து சமூக நீதியை நிலைநாட்டுதல், தாத்தா பாட்டி, தாய் தந்தையருக்கு உதவியாய் இருத்தல் என்பன போன்ற அடிப்படை ஒழுக்கங்களை பயிற்றுவித்தல்.
4. தாய்மொழி முக்கியத்துவமும் பிறமொழியின் தேவையும்:
மனிதராக பிறந்தவரின் முதல் அடையாளம் அவரின் தாய்மொழி. சிந்திக்கும் திறன் மற்ற மொழிகளை விட தாய்மொழியில் தான் அதிகம் என்பதை செயல்விளக்கங்கள் மூலம் விவரித்தல், தமிழர் வரலாறு நிறைந்திருக்கும் பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச்செல்லுதல் போன்றவற்றின் மூலம் தாய்மொழிப்பற்றை வளர்த்தெடுத்தல். இன்றைய காலகட்டத்தில் அனைத்து அறிவியல் தொழில்நுட்பங்கள் தமிழில் முழுவதுமாக கிடைக்கப்பெறாததால் பிறமொழிகளான ஆங்கிலம், ய(ஜ)ப்பானிய மொழிகளை ஒரு மொழியாக மட்டும் கற்றுக்கொடுத்தல். இவர்கள் மூலம் பிற்காலத்தில் அனைத்து அறிவியல் தொழில்நுட்பங்களும் தமிழில் கிடைக்கப்பெறவேண்டிய அவசியத்தை விதைத்தல்.
5. அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவை வளர்த்தெடுத்தல்:
ஒவ்வொரு பாடத்திட்டத்தின் தொடக்கத்தில் அதன் பாடச்சுருக்கம் மற்றும் பாடத்தின் முடிவில் அதன் முடிவுரையை தெளிவாக கட்டமைப்பத்துக்கொடுப்பது. இதன் மூலம் அந்த பாடத்திட்டத்தின் தொடக்கத்தில் நாம் என்ன கற்கவிருக்கிறோம், முடிவில் என்ன கற்றுக்கொண்டோம் என்பதனை எளிமையாக புரிந்துகொள்ள வழிவகுப்பது. செயல்வழிக்கல்வி மூலம் பாடத்திட்டத்தை மேலும் எளிமையாக விளக்குவது. தொழில்நுட்ப அறிவை வளர்க்கக்கூடிய சாதனங்களை வழங்கி அதனை கையாளப் பயிற்றுவித்தல். மூன்று மாதத்திற்கொருமுறை கலை அல்லது அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தல் அல்லது அழைத்துச்செல்லுதல். பாரம்பரிய விளையாட்டு உட்பட அனைத்துவித விளையாட்டுகளையும் ஊக்குவித்தல்.
இதனை செயல்படுத்த முழுமதி உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்களுடனும், முழுமதி தன்னார்வலர்களுடனும் பல்வேறு குழுக்களாக இணைந்து செயல்படவிருக்கிறார்கள். மேற்கண்ட அடிப்படைக்கூறுகளில் எவையேனும் சேர்க்கவோ குறைக்கவோ வேண்டியிருப்பின் நண்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறோம்.
இப்படிக்கு
முழுமதி நிர்வாகம்
http://muzhumathi.org/Tamil/
முழுமதி அறக்கட்டளை வழங்கும் கல்வி மேம்பாட்டுத்திட்டம்-1
புதுகரிக்காத்தூர் அரசுப்பள்ளி நூலகம் திறப்புவிழா அழைப்பிதழ்
முழுமதி அறக்கட்டளையானது போளூர் வட்டத்தில் அமைந்துள்ள புதுக்கரிக்காத்தூர் அரசுப்பள்ளியை முன்மாதிரி பள்ளியாக மாற்றுவதற்காக தேர்ந்தெடுத்துள்ளதை நாம் அறிந்ததே. இப்பள்ளியில் நூலகம் அமைப்பது பற்றி ஏற்கெனவே ஆலோசனைகள் கேட்டு பதிவிட்டிருந்தோம். ஏறத்தாழ 300 புத்தகங்களை கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்துடன் துளிர் (அறிவியல் இதழ்), பூவுலகு மின்மினி (சுற்றுச்சூழல் இதழ்) போன்ற மாத இதழ்களையும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
நூலகத்திற்கு தேவையான புத்தகப்பட்டியல் தயாரிக்க நண்பர்கள் பல வகைகளில் உதவி புரிந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் இப்பதிவின் மூலம் முழுமதியின் சார்பாக எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நூலகமானது, குழந்தைகள் நாளான நவம்பர் 14 ஆம் திகதி திறப்பு விழா காணவிருக்கிறது. இத்திறப்பு விழாவில் நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்து முழுமதியின் செயல்பாட்டிற்கு தங்கள் மேலான ஆதரவை நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திறப்பு விழா நாள்: 14 - 11 – 2014
இடம்: புதுகரிக்காத்தூர் அரசுப்பள்ளி, (போளூரிலிருந்து வேலூர் செல்லும் சாலை, முருகப்பாடி வழி)
நேரம் : மதியம் 2 மணி
தொடர்புக்கு: திரு. பரசுராமன் : + 91-9487349488
(தலைமை ஆசிரியர்)
திரு. ஜெகநாதன் : + 91-9894016112
(ஆசிரியர்)
முழுமதி முகநூல் பக்கம்:https://www.facebook.com/groups/227137273964819/?ref=ts&fref=ts
முழுமதி தன்னார்வலராக இணைய:
https://docs.google.com/…/1YYco2QgvxpIadUvGvShh3C8…/viewform
நன்றி
தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்
முழுமதி அறக்கட்டளை
http://muzhumathi.org/Tamil/


ஜப்பான் முழுமதி பொங்கல் திருவிழா 2014









Thursday, November 6, 2014


முழுமதி உறவுகளுக்கும் ஜப்பான் வாழ் தமிழ் மக்களுக்கும் அன்பு வணக்கங்கள்,

நவம்பர் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, நிஷிகசாயில் நடைபெற்ற முழுமதி கலந்தாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.

1.   இந்தவருடம் திட்டமிட்டபடி கல்வி உதவித் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
பள்ளி மேம்பாட்டுத்திட்டம், மருத்துவம் மற்றும் விவசாயம் ஆக்கிய திட்டங்களை விரைந்துமுடித்தல்.
2.   உதவித் திட்டம் சென்றடையும் வழிமுறைகள்,களப்பணியாலர்கள் பற்றிய விவரங்களை முழுமதி குழுமத்தினர்க்கு தொகுத்து வழங்குதல்.
3.   நிதிநிலை அறிக்கையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முழுமதி குழுமத்தினர் பார்வைக்கு அனுப்புதல்.
4.   புதுகரிக்காத்தூர் பள்ளி செயல்பாட்டிற்க்கு குழுக்கள் பிரித்து ஒவ்வொரு செயலுக்கும் பொருப்பாளர்கள் மற்றும் இலக்கு நிர்னயிக்கப்பட்டுள்ளது..
5.   ஜப்பானில் பொஙகல் விழா நடைபெறும் தேதி 14 பிப்ரவரி 2015, சிறப்பு விருந்தினர் முடிவு செய்யப்பட்டு பொங்கல் விழாக்குழு அமைக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பார்க்கவும்.

கலந்தாய்வில் கலந்துகொண்ட தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைத்து முழுமதி உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.


இப்படிக்கு
முழுமதி நிர்வாகம்