முழுமதியின் அறிவுடமை கல்வி உதவித்திட்டம்.....
கிராமபுற மாணவர்களுக்கு
ஏட்டு கல்வியோடு , விவசாயம், அலங்கார பொருட்கள் உற்பத்தி, சிறு சிறு மின்
பொருட்கள் உற்பத்தி, கணிணி பயன்பாட்டு நுட்பங்கள் , ஆகியன போன்ற வாழ்வியல்
சார் திறன்களை அவற்றில் சிறப்பானவர்களை கொண்டு பயிற்சி அளிப்பதன் மூலம்
கல்வியோடு ஓர் சுய தொழிலையும் பெற்றுக்கொள்ளும் ஓர் வாய்ப்பினை கிராமப்புற
மாணவர்களுக்கு வழங்குதல்.
அறிவியலில் அடிப்படைகளோடு நின்று விடுகிறது மாணவர்களின் அறிவாற்றல். அவ்வாறில்லாமல் புது புது தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு அவற்றின் செயல்பாட்டு முறைமைகளோடு கற்பிப்பதால் எதிர்கால அறிவியல் மேதைகளை நம் நாட்டு கிராமப்புறங்கில் இருந்தும் உருவாக்கி விடலாம்.
கல்வியின் முதன்மை நோக்கமாக இருப்பது வேலைவாய்ப்பு அந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை மாணவர்களுக்கு அறிய செய்வதன் மூலம் … எதிர்காலத்தில் அவனுக்கான ஓர் லட்சிய பாதையை தேர்ந்தெடுக்க எளிய ஓர் வழியாக அமையும்.

- இன்றைய தமிழக பள்ளிகளின் கல்வித்திட்டமானது குழந்தைகளை புரிதல் இல்லாமல் மனப்பாடம் செய்து மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. ஆகையால் தமிழகத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களின் அரசுப்பள்ளிகளை தேர்ந்தெடுத்து, அதில் பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் தத்துவங்கள், கூற்றுகளை எளிமையான செய்முறை மற்றும் விளக்கப்படங்கள் மூலம் புரிந்துகொள்ள வழிவகை செய்தல்.
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற அடிப்படைகல்வியின் புரிதல் அவசியமாகிறது. அத்துடன் இன்றைய வியாபார உலகில் ஆங்கில மொழியின் தேவையும் உள்ளது. ஆகவே “தமிழ்வழிக்கல்வியின் அவசியத்தையும் ஆங்கிலமொழிப்பயிற்சியின் தேவையையும்" தமிழ்ச்சமூகத்திடம் பரப்புவது.
- இலக்கியம், வரலாறு, மேலாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிப் படிப்பின் முக்கியத்துவம் பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்துவதோட, அதற்கான உதவிகளையும் செய்தல்.
No comments:
Post a Comment